விவாக நிகழ்ச்சி 65-02-20x 1. இந்த மணப்பெண்ணை இந்த மணமகனுக்கு மனைவியாக கொடுக்க நான் யாரிடம் கேட்க வேண்டும்? (“நான் அவளுடைய தந்தை, அதை விரும்புகிறேன்” - ஆசி.) 2. பிரியமானவர்களே, பரிசுத்த பவுல் சொன்ன வண்ணம் தேவனுடைய பிரசன்னத்தில் புருஷனும் ஸ்திரீயும் பரிசுத்த விவாகத்தில் ஒன்றாக இணைவதற்காக, இது அனைத்து மனிதர்களிடையே கனத்துக்குரியதாய் இருக்கிறது. ஆகவே நாம் இங்கு, அது யாராலும் விரும்பத்தகாததாகவோ அல்லது இலகுவாகவோ அல்ல, ஆனால் பயபக்தியுடன், விவேகத்துடன், அறிவுரையுடன், நிதானமாக தேவ பயத்தில் வந்துள்ளோம். 3. இந்த பரிசுத்த நிலையில் இணைவதற்காக இந்த இரண்டு நபர்களும். இப்பொழுது வந்துள்ளனர். இந்த பரிசுத்த விவாகத்தில் ஏன் அவர்கள் சட்டபூர்வமாக இணையக் கூடாது என்று நியாயமான காரணத்தை காட்டக்கூடியவர்கள் யாராவது இங்கிருந்தால், இப்பொழுது அவர்கள் பேசட்டும் அல்லது இனி எப்போதும் அமைதியாக இருக்கட்டும். 4. இந்த பரிசுத்த விவாகத்தில் நீங்கள் சட்டபூர்வமாக இணையக் கூடாதபடிக்கு ஏதேனும் தடை உங்களுக்கு தெரிந்திருந்தால், இப்பொழுது அதை நீங்கள் அறிக்கை செய்யலாம், முழு இருதயங்களின் இரகசியங்கள் வெளிப்படும் போது, நியாயத்தீர்ப்பு நாளில் நீங்கள் உறுதியாக பதிலளிக்கையில், நான் உங்களிடம் கேட்டதை குறித்து உங்கள் இருவரையும் கண்டனம் செய்வேன், ஏனெனில் தேவனுடைய வார்த்தை அனுமதிப்பதை விட மற்றபடி இணையும் எந்த நபர்களுக்கும், அவர்களுடைய விவாகம் சட்டபூர்வமானது அல்ல என்று உங்களுக்கு உறுதியளிக்கப்படுகிறது. 5. ஆனால் நீங்கள் ஏற்றுக்கொள்ளும் இந்த பரிசுத்தமான கடமையை நீங்கள் முறையாக கருதிக்கொண்டு, தேவபயத்தில் விவேகத்துடன், நிதானமாக, பயபக்தியுடன், பிரவேசிக்க நீங்கள் ஆயத்தமாகிவிட்டீர்கள் என்று விசுவாசித்துக்கொண்டு, நான் உங்களுக்கு விவாக உடன்படிக்கையை அறிவிக்கிறேன். உங்களுடைய வலது கரங்களை நீங்கள் இணைத்திருக்கும் போது நீங்கள் அதை கூறுங்கள். (மணமகனும் மணமகளும் தங்கள் வலது கரங்களை ஒன்றாக இணைக்கின்றார்கள்- ஆசி.) 6. நீ இந்த பெண்ணை உன்னுடைய சட்டபூர்வமான மனைவியாக ஏற்றுக்கொண்டு, இந்த பரிசுத்த விவாகத்தில் இணைந்து ஜீவிக்கவும்; வியாதியிலும் சுகத்திலும், செல்வத்திலும் வறுமையிலும், எல்லாவற்றையும் விட்டுவிட்டு, அன்பு செய்து, மரியாதை செய்து, நீ உயிரோடிருக்கும் வரை அவளை பற்றிக் கொண்டிருப்பேன், என்று உறுதியளிக்கிறாயா? (“நான் செய்வேன்” என்று மணமகன் பதிலளிக்கின்றான்- ஆசி.) 7. நீ இந்த ஆணை உன்னுடைய சட்டபூர்வமான கணவனாக ஏற்றுக்கொண்டு, இந்த பரிசுத்த விவாகத்தில் இணைந்து ஜீவிக்கவும்; வியாதிலும் சுகத்திலும், செல்வத்திலும் வறுமையிலும், எல்லாவற்றையும் விட்டுவிட்டு, அன்பு செய்து, மரியாதை செய்து, நீ உயிரோடிருக்கும் வரை அவரை பற்றிக் கொண்டிருப்பேன் என்று உறுதியளிக்கிறாயா? (“நான் செய்வேன்” என்று மணமகள் பதிலளிக்கிறாள் - ஆசி.) 8. இந்த உடன்படிக்கையை எப்பொழுதும் காத்துக் கொள்ள ஒரு அடையாளம் நமக்கு வேண்டும். (இரண்டு மோதிரங்கள் ஊழியக்காரரின் வேதாகமத்தில் வைக்கப்பட்டது, பின்பு மணமகனுடையது மணமகளுக்கும் மணமகளினுடையது மணமகனுக்கும் கொடுக்கப்பட்டது - ஆசி.) உங்களுடைய வலது கரங்களை மறுபடியுமாக இணைத்து, வேதாகமத்தின் மீது நீங்கள் வைப்பீர்களா. 9. நம்முடைய தலைகளை தாழ்த்துவோமாக. 10. சர்வ வல்லமையுள்ள தேவனே, எல்லாவற்றையும் சிருஷ்டித்தவரே, நித்திய ஜீவனின் படைப்பாளியே, நல்ல ஈவுகளை தருபவரே, மனிதனுக்கு ஒரு பரிசை கொடுப்பது பொருத்தமானது என்று நீர் பார்த்த போது, நீர் அவனுக்கு ஒரு மனைவியை கொடுத்தீர். “மனைவியை கண்டடைகிறவன் நன்மையானதை கண்டடைகிறான்” என்று எழுதப்பட்டுள்ளது. இந்த மதிய வேளையில் நாங்கள் நின்றுக் கொண்டிருக்கையில், பல வருடங்களுக்கு முன்பு, உம்மால் ஏதேன் தோட்டத்தில் முதலாவது விவாகம் நடத்தப்பட்ட நேரத்திற்கு எங்களுடைய சிந்தையை திருப்புகின்றோம், எங்களுடைய தாயும் தந்தையுமாகிய, ஆதாம் ஏவாளுக்கு நீர் விவாகம் செய்து வைத்தீர் பிதாவே. இந்த நாளிலும் மனிதன் அவனுக்கு ஒரு மனைவியை எடுத்துக் கொள்கிறான். 11. பிதாவே, இந்த வாலிப மகனும் மகளும் ஒருவருக்கொருவர் அவர்களுடைய இருதயத்தில் அன்பை கண்டுக்கொள்ளும்படியாக நீர் இவர்களை ஆசீர்வதிக்க நாங்கள் ஜெபிக்கிறோம். நாங்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கும் இந்த பொறுப்பற்ற வாழ்க்கை வாழும் காலத்தில், அநேக விவாகரத்துக்களால் வீடுகள் உடைந்து போகின்றது, இந்த தம்பதிகளுக்கு அப்படி இருக்க கூடாது. அவர்கள் ஜீவிக்கும் வரை இந்த பிரமாணத்தை நினைவுக் கொள்ளட்டும்! அவர்களை பிரிக்க கூடிய எந்த வல்லமையும் இருக்க வேண்டாம்! பிதாவே, நீர் ஈசாக்கையும் ரெபெக்காளையும் ஆசீர்வதித்து அவர்கள் சந்தோஷமாக ஜீவித்து கனி கொடுத்தது போல இந்த வாலிப மனிதனும் வாலிப ஸ்திரீக்கும் செய்யும் படியாக நாங்கள் ஜெபிக்கிறோம், பிரமாணத்தை ஏற்றுக் கொண்டு, இப்பொழுது இந்த சபை கூட்டத்துக்கு வந்து அவர்கள் உறுதிமொழி கொடுத்தார்கள். ஒருவருக்கொருவர் அவ்வாறு செய்து இந்த பொது ஸ்தலத்தில் அதை அறிவித்தார்கள். 12. இப்போதும், பிதாவே, சர்வ வல்லமையுள்ள தேவனால் எனக்கு கொடுக்கப்பட்ட கட்டளையின் வல்லமையினால், தேவதூதனால் எனக்கு ஊழியம் சாட்சியிடப்பட்டு, அவருடைய ஊழியக்காரன் என்கிற அதிகாரத்தினால் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த மனிதனையும் ஸ்திரீயையும் கணவன் மனைவியாக நான் அறிவிக்கிறேன். ஆமென். 13. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் விவாகமாகிவிட்டீர்கள். (தம்பதியர் முத்தமிட்டு பிறகு, பின்பு சபையாருக்கு முன் நடந்து செல்கிறார்கள். பியானோ வாசிப்பவர் விவாக அணிவகுப்பை இசைக்க தொடங்குகிறார்? - ஆசி.) தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கக்கடவன். (மணமகன் மணமகள் மற்றும் உடனிருந்தவர்கள் சபை இருக்கைக்கு செல்கிறார்கள்.) நாம் நின்று ஜெபித்த பிறகு கடந்து செல்லலாம். 14. எங்கள் பிதாவே, உம்மை விசுவாசிக்க கூடிய புருஷரும் ஸ்திரீகளும் இன்னும் பூமியில் இருப்பதற்காக, இந்த மதிய வேளையில் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகின்றோம். இன்று நாங்கள் இங்கிருக்கும் போது, எங்களில் அநேகர் அதே நோக்கத்திற்காக இதுபோன்ற நேரங்களை கடந்து வந்திருக்கிறோம். நாங்கள் நினைவு கூறுகிறோம். இந்த வாலிபனையும் வாலிப பெண்ணையும் பார்க்கும் போது, ஒருவருக்கொருவர் அவர்களுக்காக மட்டும் ஜீவிக்கவும், உலக காரியங்களை விட்டு மற்றும் சக நண்பர்களிடமிருந்து பிரிந்து பரிசுத்தமாக ஜீவிக்க ஒப்புக் கொடுக்க வேண்டும். 15. சபையும் கூட பரிசுத்தமாக ஜீவிக்க உலகத்திலிருந்து வேறு பிரிக்கப்பட்டு, மணவாளனின் வருகைக்காக காத்திருக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். நம்முடைய இருதயம் அவருக்காக அன்பில் துடிக்கவும். ஒருநாள் அவர் வரும்போது, ஆகாயத்தில் நடக்க போகும் அந்த மகத்தான விவாக விருந்திற்காக வாஞ்சித்து காத்திருந்து அவர் மீது நம்முடைய சிந்தை இருப்பதாக. அவர் தாமதித்தாலும், ஆனாலும் அவர் இங்கிருக்கிறார். இன்று நாம் புறப்படுகையில், நம்முடைய இருதயத்திலும் சிந்தையிலும் இது மீண்டும் இணைந்திருப்பதாக, சீக்கிரம் வரபோகும் அந்த மகத்தான நிகழ்ச்சியில் ஒருநாள் நாங்கள் பங்குபெற, உலகத்திலிருந்து மாசுப்பாடமல் ஜீவிப்போம் என்று மீண்டும் நாங்கள் உறுதியளிக்கிறோம். இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.